கன்னியாகுமரியில் கால்வாயில் மிதந்து வந்த பெண் சடலம்... போலீசார் விசாரணை...!



Body of woman floating in canal in Kanyakumari... Police investigation...

கால்வாயில் பெண்ணின் சடலம் மிதந்து வந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி கூண்டு பாலம் அருகில் உள்ள கால்வாயில் 85 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து மயிலாடி கிராம நிர்வாக அலுவலர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.