#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போதைப் பொருள் கடத்தல் விவகாரம்.. உதயநிதி ஸ்டாலின் மனைவி பெயரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் திரைப்பட இயக்குனருமான கிருத்திகா ஸ்டாலினின் பெயரில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள 2 பள்ளிகளுக்கு அல் பாதர் என்ற இயக்கத்திடமிருந்து கிருத்திகா ஸ்டாலினின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சலில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்டிருக்கிறது. அந்த மின்னஞ்சலில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கோடு கிருத்திகா ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசி வந்தால் இரண்டு தனியார் பள்ளிகளிலும் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான நபர்களிடமிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலையும் சைபர் கிரைம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.