திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடு காலி செய்வதில் தகராறு.. இடம்கொடுத்த உரிமையாளரின் வீட்டில் பெட்ரோல் வீசி தாக்குதல்.. புதுக்கோட்டையில் பரபரப்பு.!
வீட்டை காலி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதால், வாடகை வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள ஹரிஹரசுதன் (வயது 25) என்பவருக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.
அப்போது வாடகை வீட்டை ஹரிஹரசுதன் காலி செய்யாமல் இருந்ததால், ஹரிஹரசுதனுக்கும், செந்தில்குமாரின் தாய் விஜயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தகராறு ஏற்பட்ட அன்றே ஹரிஹரசுதன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், கோபத்தில் இருந்த ஹரிஹரசுதன் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அந்த பெட்ரோல் குண்டினை செந்தில்குமாரின் வீட்டு கதவின் மீது வீசி விட்டுச் சென்றுள்ளார். இதனைக் கண்ட செந்தில்குமாரின் குடும்பத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர்.
தொடர்ந்து செந்தில்குமார் ஆலங்குடி காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரசுதனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.