திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசை வார்த்தை கூறி 11ம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை இறந்த நிலையில், தனது தாயின் அரவணைப்பில் வசித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவி தேர்வு எழுதி வந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியின் தாயார் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியின் தாய் விசாரித்த போது, மாணவி அதே கிராமத்தை சேர்ந்த ரகு என்பவரை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் மாணவியை மீட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரகுவை வலை வீசி தேடி வருகின்றனர்.