மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்த பெண்ணுக்கு கம்பிநீட்டி விட்டு 2வது திருமணம் செய்த காதலன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
கடலூர் அருகே காதலித்த பெண்ணை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் மேளகல் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவு திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த விக்னேஷின் பெற்றோர் உடனடியாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷ் பெற்றோர் அறிவுரைப்படி இரண்டாவதாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.