திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலித்து விட்டு கம்பிநீட்ட முயன்ற காதலன்.. போலீசார் வலைவீச்சு.!
சமீப காலமாக காதல் என்ற பெயரில் ஆண், பெண் இருவரும் பல்வேறு மோசடிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் காதலிப்பதாக ஏமாற்றி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி விடுகின்றனர். இன்னும் சிலர் பணம் மற்றும் நகைக்காக காதல் வலையில் சிக்குகின்றனர்.
இந்த நிலையில் பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராமையன் மகன் ரமணன். குழி தொழிலாளியான இவர் 21 வயது உடைய பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணுடன் காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த பெண் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பண்ருட்டி மகளிர் போலீசார் தலைமறைவாக உள்ள ரமணனை தேடி வருகின்றனர்.