#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளைஞரின் தவறால் வாழ்க்கையை இழந்துதவிக்கும் இருபெண்கள்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வாட்டாத்திகோட்டை கொள்ளுக்காடு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் லெனின். இவர் சண்முகப்பிரியா என்ற பெண்ணை கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளனர். அதனால் சண்முகப்பிரியா கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் அவர் லெனினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் ஆனால் அவரோ கருவை கலைத்துவிடு என கூறியுள்ளார்.
ஆனால் சண்முகப்ரியா கர்ப்பத்தை கலைக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு சென்ற அவரால் கொரோனா ஊரடங்கால் ஊருக்கு திரும்பமுடியவில்லை. இந்நிலையில் லெனினுக்கு அவர்களது குடும்பத்தார் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஊருக்குத் திரும்பிய சண்முகப்பிரியாவிற்கு லெனினின் திருமண விவகாரம் தெரிய வந்தநிலையில் அவர் தன்னை லெனின் ஏமாற்றிவிட்டார் என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் லெனின் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். மேலும் சண்முகப்பிரியாவிற்கு நேற்று பெண்குழந்தை பிறந்தது. லெனினின் மரணம் இரு பெண்களின் குடும்பத்தாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லெனின் செய்த தவறால் இது பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.