மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கானா பாடலுக்கு செல்பி மோகம்.. இரயில் அடிபட்டு நண்பர்கள் கண்முன் இளைஞன் சாவு.!
கானா பாடல் ஆல்பத்திற்காக செல்பி எடுக்க முயன்ற போது, ரயில் மோதி இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகாமையில் நெல்லூர்பேட்டை, புத்தர் நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகன் வசந்த குமார் (வயது 22). இவர் சொந்தமாக கானா பாடல்களை எழுதி யூடியூபில் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் குடியாத்தம் அருகாமையில் நேற்று மாலை நேரத்தில், மேல் ஆலத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அத்துடன் தனது நண்பர்களுடன் கானா பாடல் ஆல்பத்திற்காக செல்பி எடுக்க, தண்டவாள பகுதியில நின்றுள்ளார்.
அப்போது திடீரென அவ்வழியாக வந்த ரயில் வசந்தகுமார் மீது மோதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட வசந்தகுமாரின் நண்பர்கள் அலறி அடித்துக்கொண்டு 'நேற்று முன்தினம் தானே பிறந்தநாள் கொண்டாடினாய், உனக்கா இந்த நிலைமை' என கதறி அழுதுள்ளனர்.
பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த மேல்பட்டி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ரயிலில் அடிபட்டு இறந்த வசந்தகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.