மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவர்களுக்குள் ஜாதிச்சண்டை.. மோதலில் 17 வயது மாணவர் பரிதாப மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!!
பள்ளியில் சாதிய ரீதியாக ஏற்பட்ட மோதலில் 17 வயது மாணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அருகாமையில் பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது சாதிய ரீதியாக கயிறு கட்டுவது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், அதில் 12 ஆம் வகுப்பு பயிலும் செல்வசூரியன் என்ற ஒரு மாணவன், சக மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பெல்ட் மட்டும் கற்களை கொண்டு அவரை தலையில் கடுமையாக தாக்கியதால், பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் மாணவனை மீட்டு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று அதிகாலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக அதே பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் மூன்று பேரை, பாப்பாக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் மாணவர்களுக்கிடையில் சாதிய மோதலில் சக மாணவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த சூழல் முழுவதுமாக மாறும் வரை பாதுகாப்பிற்காக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.