மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியின் நிர்வாண வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பி விட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில் கால்வாய் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்கள் கழித்து பிரவீன் குமாரிடம் அவரின் காதலி தனக்கு வேறு ஒருவரை திருமண செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் இருவரும் உல்லாசமாக இருந்த போது எடுத்து கொண்ட வீடியோக்களை காதலியிடம் காட்டி நீ யாரை திருமணம் செய்து கொண்டு போனாலும் நான் கூப்பிடும் போது வந்து என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்த பெண் நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசில் புகார் கொடுத்ததை தெரிந்து கொண்ட பிரவீன் குமார் தலைமறைவாகியுள்ளார். மேலும் வேறு ஒரு நம்பரில் இருந்து காதலியை தொடர் கொண்டு என்னைய போலீசில் சிக்க வைத்து விட்டாய் உன்னை பழி வாங்குகிறேன் பார் என்று கூறியுள்ளார்.
அதன்பின் காதலியுடனான நிர்வாண வீடியோக்களை ஊர் மக்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு பிரவீன் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.