மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற இளைஞர், அந்த சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரும் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ணகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நாகர்கோயில் நீதிமன்றம் குற்றவாளி கிருஷ்ண குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.