#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரியாணியில் பீஸ் இல்லாததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
பிரியாணியில் பீஸ் இல்லாததால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், இளைஞர் ஒருவரும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த போது பிரியாணியில் பீஸ் இல்லை என கூறப்படுகிறது.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து உயிரிழந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதில், அந்த பெண் சென்னை மெரினா பகுதியை சேர்ந்த தேவி என்பதும், அவர் விபச்சாரம் செய்யும் பெண் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், அவரை கொலை செய்த வாலிபர் செய்யாறு மாவட்டத்தை சேர்ந்த குணா என்பதும் தெரிய வந்துள்ளது.