திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு., ஓரினசேர்க்கைக்காக நடந்த கொலை.!!
தர்மபுரி மாவட்டத்தில் மதியரசு என்னும் சிறுவன் காணாமல் போனதை தொடர்ந்து, அதே பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவன் மதியரசு ஓரின சேர்க்கைக்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் பிரகாஷ் என்பவரை கைது செய்துள்ளது. பின்னர் மதியரசின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மதியரசு குறித்து அவரது பெற்றோர் ஆதிமூலம் மற்றும் சுதா ஆகியோருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் மதியரசு உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த உறவினர்களும், கிராம மக்களும் மதியரசின் கொலையில் வேறு சில நபர்களும் கூட்டு சேர்ந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல சிரமப்பட்டதை தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர் என்று அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் இக்கொலையில் பிரகாஷ் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.