மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை... உடலை சாக்குமூட்டையில் கட்டி புதருக்குள் வீசிய பெண்வீட்டார்..!
காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன்கோட்டை அடுத்த சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு விஜய் (வயது 24). இவர் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகளான துர்காவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் துர்காவின் வீட்டிற்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளனர்.
காதல்பிரச்சனை காரணமாக அழகு விஜய் மற்றும் துர்காவின் அண்ணன் அஜித் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு துர்கா மற்றும் அழகு விஜய் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். இது குறித்து அறிந்த அஜித் தனது தங்கை துர்காவை கண்டித்ததுடன், அவரது கண்முன்னே அழகு விஜயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த அழகு விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின் துர்காவின் தந்தை மற்றும் அண்ணன் இருவரும் சேர்ந்து இறந்த அழகு விஜயின் உடலை சாக்கு பையில் கட்டி, ஆத்தூர் காமராஜர் அணை கரையோரத்தில் புதருக்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர். காலையில் அஜித் வீட்டிற்கு அருகே ரத்தமாக இருப்பதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், தமிழ்ச்செல்வன் உண்மையை ஒப்புக்கொண்டு உடலை சாக்கு முட்டையில் கட்டி தூக்கி போட்டு இடத்தை காட்டியுள்ளார். அங்கு சென்று அழகு விஜயின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்த்துள்ளனர்.
இதற்கிடையில் குற்றவாளி அஜித்தை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் ஒன்று திரண்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலந்து சென்றுள்ளனர்.