"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
காதலை பிரித்ததால் அந்த வீடியோவை காதலியின் தாய்க்கு அனுப்பிய காதலன்.!
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேலை செய்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தாய் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து அங்குள்ள பள்ளியில் சேர்த்து விட்டார்.
இதனையடுத்து தன்னுடைய காதலியை பிரித்து வெளியூருக்கு அனுப்பியதை அறிந்த சிறுவன் பல இடங்களில் தேடி உள்ளான். அப்போது காதலி திருப்பூரின் தங்கி படிப்பதை அறிந்து கொண்டான். இதனையடுத்து மாணவியை கண்டுபிடித்து மீண்டும் அவருடன் பேசி காதலை வளர்த்து வந்துள்ளான்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாணவியை தனியாக அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளான். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளான். இந்த வீடியோவை மாணவியின் தாயின் செல்போனுக்கு அனுப்பியுள்ளான்.
எந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து கண்டித்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை அடித்து விரட்டியுள்ளனர்.
இதனிடையே மாணவியின் தாயார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.