திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய இளைஞர் கைது !
அரியலூர் அருகே காதலிப்பதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலசம்போடை கிராமத்தை சேர்ந்தவர் அன்பு துரை. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்துள்ளார்.
அப்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக அன்புத்துரையிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அன்புதுரை சாதியை காரணம் காட்டி மறுத்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அன்புதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.