மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரயில் பயணத்தில் சோகம்.. படியில் பயணித்ததால் இளைஞருக்கு நிகழ்ந்த விபரீதம்..! பதறவைக்கும் சம்பவம்.!
ரயிலின் படியில் பயணம் செய்து வந்த வட மாநில இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ரயில் நிலையம் அருகாமையில் பாண்டிச்சேரி திருப்பதி பயணிகள் ரயிலில் வடமாநில இளைஞர் ஒருவர் பயணம் செய்து வந்துள்ளார். இவர் ரயிலின் படியில் பயணம் செய்ததால், திடீரென தவறி கீழே விழுந்துள்ளார்.
அத்துடன் இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரது கையை பிடித்து இழுத்துள்ளனர். இருப்பினும் அவரை காப்பாற்ற இயலாமல் போனது. இதனால் அவர் பயணம் செய்த ரயில் சக்கரத்தில் சிக்கி மிகவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், இவர் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் என்பதும், விழுப்புரத்திலிருந்து இவர் படியில் தான் பயணம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அத்துடன் மேல்மருவத்தூர் அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது, ரயிலின் படியில் இருந்து திடீரென்று அவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.