மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூதாட்டியிடம் தண்ணீர் கேட்டு இளைஞர் செய்த செயல்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
சென்னை மயிலாப்பூர் அருகே உள்ள அலமேலு மங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவிதா. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் மூதாட்டி இடம் குடிக்க தண்ணீர் கொஞ்சம் கொடுங்கள் அக்கா என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து சவிதா வீட்டுக்குள் சென்று தண்ணீரை எடுத்து வர சென்ற போது, அந்த இளைஞர் சவிதாவை பின் தொடர்ந்து கதவை சாத்தி, கடுமையாக தாக்கி, அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் காது அறுபட்டதால் சவிதா திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டுள்ளார். சவிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தப்பியோடிய இளைஞரை துரத்தி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினார். அதில் மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பதும், கஞ்சா வாங்க பணம் இல்லாததால் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். மேலும் காது அறுந்த சவிதா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.