மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு.. காதலன் எடுத்த விபரீத முடிவு!
சேலம் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டினம் கிராமத்தை சேர்ந்த 27 வயதான பிரகாஷ் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பெண் தான் தன்னுடைய காதலி எனவும், வருங்கால மனைவி என்றும் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் வீட்டிற்கு சென்று உங்களது பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என பெண் கேட்டுள்ளார்.
அதற்கு பெண்ணின் தந்தை உங்களிடம் சொந்த வீடு கூட இல்லை அதனால் பெண் தர முடியாது என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் உடனடியாக சொந்த வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.
இதனால், மன விரக்தியடைந்த பிரகாஷ் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த பிரகாஷின் உறவினர்கள் அவரை இணைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.