திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல மறுத்த பெற்றோர்.. 18 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
திருநெல்வேலி அருகே உள்ள களக்காடு சரோஜினிபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சந்தன பிரபா என்ற மனைவியும், மைக்கேல் ஜெரோன் என்ற மகனும் இருந்துள்ளனர்.
இதில் மாணவன் மைக்கேல் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார் இந்த நிலையில் மைக்கேல் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல ஆசைப்பட்டு அதற்காக ஒரு படிப்பில் சேர பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு பணம் இல்லாததால் படிக்க வைக்க முடியாது என பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் மைக்கேல் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் மாணவன் மைக்கேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.