மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்தரங்க வீடியோவை வைத்து காதலியை மிரட்டிய காதலன் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பிரவீன் குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும் பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இதனிடையே தனிமையில் சந்தித்துக் கொண்ட இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், இதனை அந்த இளைஞர், அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி மீண்டும் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
ஆனால் அந்த பெண் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ என்னிடம் உள்ளது. என்னுடன் இப்போது நீ இப்போது வரவில்லை என்றால் அதனை சமூக வலைதளங்களில் வெயிட்டு விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.