மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை பார்க்க சென்ற காதலன் விபத்தில் பலி.. மனமுடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் அகில் பிரியா. இவர் கோவையில் உள்ள தனியார் மருந்து கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான ஸ்டாலின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த அகில்பிரியா, கடந்த நவம்பர் 14ஆம் தேதி மீண்டும் கோவை சென்றுள்ளார். அப்போது தனது காதலனை சந்திப்பதற்காக சேலம் வர கூறியுள்ளார். இதனையடுத்து பிரியாவின் காதலன் ஸ்டாலின் தனது இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு வந்துள்ளார்.
அப்போதே சேலத்திற்கு அருகில் வந்த போது திடீரென விபத்தில் சிக்கிய ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அகில் பிரியா, தன்னால்தான் தனது காதலன் இறந்து விட்டான் என நேற்று இரவு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் மற்றும் காதலி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.