மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்டவாளத்தில் 2 துண்டுகளாக வாலிபரின் சடலம்: அதிகாலையில் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..!
சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த மோரூர் அருகேயுள்ள வேங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சசிகுமாரின் மனைவி கடந்த 5 மாதங்களாக அவரது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இதன் காரணமாக அடிக்கடி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சசிகுமார் அங்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற சசிகுமார் இரவு தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். இதற்கிடையே நேற்று அதிகாலை மோரூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டதில் அவர் வேங்கிபாளையத்தை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது. சசிகுமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்ககிரி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இளைஞரின் சடலத்தை இரண்டு துண்டுகளாக ரயில்வே காவல்துறையினர் மீட்டெடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.