மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவ்வை சண்முகி போல், பெண் வேடமிட்டு தினந்தோறும் இளைஞன் செய்த காரியம்! வெளியான அதிர்ச்சி காரணம்!!
மானாமதுரை மலையனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் ராஜா.40 வயது நிறைந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.மேலும் போதிய படிப்பறிவு இல்லாத அவர் தனது வயதான பெற்றோரை பார்த்துக்கொண்ட வேண்டிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் பல இடங்களில் வேலை கேட்டுள்ளார். ஆனால் அங்கெல்லாம் அவரிடம் ஆண்களுக்கு வேலை இல்லை என கூறி விரட்டியுள்ளனர்.
இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த ராஜா எப்படியாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், அவ்வை சண்முகி படத்தில் கமல் பெண் வேடமிட்டு செல்வது போல பெண் வேடமிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.மேலும் வீட்டிலிருந்து சாதாரணமாக கிளம்பிய ராஜா பின்னர் புடவை அணிந்து, நீண்ட ஜடை போட்டு பூ, பொட்டு என பெண் போல வேடமிட்டு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து அவருக்கு மூன்று வீடுகளில் வேலை கிடைத்து சம்பாதிக்கும் வந்துள்ளார். இந்நிலையில் ராஜா பெண் வேடமிட்டு வேலைக்கு செல்வது குறித்து அறிந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து போலீசார் ராஜாவை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பெற்றோருக்காக இப்படி செய்திருந்தாலும், பெண் வேடமிட்டு வீட்டு உரிமையாளர்களை ஏமாற்றுவது தவறு. இது இறுதியில் பெரும் விபரீதத்தில் போய் முடியலாம் என எச்சரித்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.