தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம்.. பெற்றோர் கூறிய வார்த்தையைக் கேட்டு சட்டென்று காலில் விழுந்த அமைச்சர்.!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வருபவர்கள் அருள் - பரிமளா தம்பதியினர். இவர்களது 13 வயதான இரண்டாவது மகன் ராகவேந்திரன் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று மூளைச் சாவு அடைந்துள்ளார். இதனை அறிந்த சிறுவனின் பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதனையடுத்து சிறுவன் ராகவேந்திராவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக சர்வாந்தாங்கல் பிள்ளையார்கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்பதால் சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அமைச்சர் ஆர்.காந்தி உடல் உறுப்பு தானம் செய்த சிறுவனின் பெற்றோரிடம் இரு கரம் கூப்பி தலைவணங்கி கண்ணீர் மல்க ஆறுதல் கூறியுள்ளார்.
இந்நிலையில் ராகவேந்திராவின் பெற்றோர் தங்களது மகன் இறந்தாலும் அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் உயிர் வாழலாம். இதனால் தான் நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தோம் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அமைச்சர் ஆர்.காந்தி சட்டென்று சிறுவனின் தாயார் காலில் விழுந்து "உங்கள் காலை தொட்டு கும்பிடுகிறேன் அம்மா" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். அமைச்சரின் இந்த செயலைக் கண்ட அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்து போயினர்.