அம்மன் கோவிலின் மேற்கூரையை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள அம்மன் நகைகள் திருட்டு.!



 Break the roof of the Amman temple and loot jewelery

தருமபுரி மாவட்டம், அரூரில் ஊஞ்சல் மாரியம்மன் கோயில் மேற்கூரையை உடைத்து தங்கம், வெள்ளி நகை மற்றும் கோவிலில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரில் அருள்மிகு ஸ்ரீ ஊஞ்சல் மாரியம்மன் கோயில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாாி பூஜை முடிந்த பின்னர் கோவிலை  பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை அந்த பகுதி மக்கள் கோவில் வழியாக சென்ற போது கோவிலின் மேற்கூரை பிரிக்கப்பட்டும், கதவு திறந்தும் இருந்தது. 

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கோவில் பூசாாி மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்ஹானர். இதையடுத்து அவா்கள் விரைந்து வந்து பார்த்தபோது மர்மநபர்கள் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்கம், வெள்ளிப்பொருட்கள் மற்றும் கோவிலில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து கோவில் பூசாரி அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் கொள்ளை நடைபெற்ற கோவிலை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரூர் போலீசார், நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.