மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: லாரி - ஆட்டோ மோதி பயங்கர விபத்து.. 4 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி..!
சென்னையில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய இன்று வந்திருந்தனர். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை நேரத்தில் தங்களின் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
குடும்பத்தினர் ஆட்டோவில் பயணம் செய்த நிலையில், ஆட்டோ திண்டிவனத்தை அடுத்த தீவனூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலை நோக்கி பயணம் செய்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் இருந்த அறிந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியோரை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.