பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
தடபுடலா நடந்த திருமண ஏற்பாடு.. நீண்டநேரமாகியும் வராத பெண் வீட்டார்.. விசாரித்துப்பார்த்தால் விஷயமே வேறு..
திருமணத்திற்கு முன் மணப்பெண் மாயமானதால் திருமணம் நின்று போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்பரம்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் செய்வதை பெற்றோர் முடிவு செய்து, திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இந்நிலையில் இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தநிலையில் மாப்பிளை வீட்டார் திருமண மண்டபத்தில் காத்திருந்தனர்.
நீண்ட நேரமாகியும் மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் உறவினர்கள் யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த மாப்பிளை வீட்டார் பெண் வீட்டாருக்கு போன் செய்துள்ளனர். இதனை அடுத்து பெண் வீட்டார் சொன்னதை கேட்டு மாப்பிளை வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் மணப்பெண் வீட்டில் இருந்து மாயமாகிவிட்டதாக பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாப்பிளை வீட்டார் தங்களுக்கு பெண் வீட்டார் நஷ்ட ஈடு தரவேண்டும் என புகார் கொடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.