#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடன் வாங்கிய பணம் வேண்டாம்.. அதற்கு பதிலாக எனது ஆசையை தீர்த்து வை!. இளம்பெண்ணிற்கு புரோக்கர் கொடுத்த டார்ச்சர்!.
சென்னை ஆவடி திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி சுஜாதாவிற்கு பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் ஹேமநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சுஜாதா குடும்ப செலவுக்கு ரூபாய்1.20 லட்சம் ஹேமநாதனிடம் கடனாக வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு 1 லட்சம் ரூபாயை திரும்பி கொடுத்துள்ளார்.மீதம் தர வேண்டிய 20 ஆயிரம் ரூபாயை வந்து வாங்கிக் கொள்ளுமாறு சுஜாதா ஹேமநாதனிடம் கூறியுள்ளார்.
ஆனால் ஹேமநாதன், எனக்கு பணம் வேண்டாம். அதற்குப்பதிலாக எனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதிர்ச்சியடைந்த சுஜாதா மறுத்துள்ளார். இதனையடுத்து இருதினங்களுக்கு முன் சுஜாதா கோயிலுக்கு சென்று வரும்பொழுது ஹேமநாதன் அவரிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் ஹேமநாதன் சுஜாதாவை கல்லால் தாக்கியுள்ளார். அங்கு நடப்பதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.