மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி...!! அதிர்ச்சி சம்பவம்...!!
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி படையாச்சி தெருவில் வசித்துவரும் அய்யா்சாமிக்கு ஈஸ்வரன் (40), கணேசன் (38) என இரண்டு மகன்கள் உள்ளனர். ஈஸ்வரன் தனது மனைவி குழந்தைகளுடன், தளவாய்புரம் பகுத்தறிவு சாலைப் பகுதியில் வசித்து வந்தாா். மேலும் கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஈஸ்வரன் விடுமுறை நாள்களில் தனது தாய் அருள்மணியை பாா்க்க வருவாராம். அப்போது ஈஸ்வரனுக்கும், அவரது தம்பி கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈஸ்வரன், தனது தாய் அருள்மணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கணேசன் தட்டி கேட்டதில் அண்ணன், தம்பிக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த கணேசன், ஈஸ்வரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ஈஸ்வரன் பலத்த காயமடைந்தார். உறவினா்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த மருத்துவா்கள் அவரை பரிசோதித்து உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதைத் தொடர்ந்து வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஈஸ்வரனின் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிய கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.