#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அண்ணன் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி.. தம்பி உலக்கையால் அடித்து கொலை.. பரபரப்பு சம்பவம்.!
அண்ணியை பலாத்காரம் செய்ய முயன்ற தம்பியை, அண்ணன் உலக்கையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரியலூர் மாவட்டத்திற்கு அருகாமையிலுள்ள பூண்டி பகுதியில் வசித்து வருபவர் கந்தசாமி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் முருகானந்தம் (வயது 38). மற்றொருவர் ரமேஷ் (வயது 32). முருகானந்தம் திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ரதி அழகி (வயது 32). தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இளையவரான ரமேஷ் சொந்த ஊரிலேயே கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ரமேஷ் நேற்று மாலை யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது அண்ணியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன ரதி அழகி சத்தம் போட்டுக்கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.
இந்த விஷயம் மாலை வீடு திரும்பிய முருகானந்தனுக்கு தெரியவர இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், ரமேஷ் கீழே விழுந்துள்ளார். அப்போது முருகானந்தம் அவருக்கு அருகில் இருந்த உலக்கையால் ரமேஷை தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்த பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழப்பழூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த முருகானந்தன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.