திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி.!
நெல்லை அருகே ஜாதி மாறி காதலித்த அக்காவை தம்பியே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர். கூலி வேலை செய்து வரும் இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகள் கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் முற்றிய நிலையில் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் தம்பி தனது அக்காவை அறிவாளால் சரமரியாதை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இதில் பெண்ணின் அறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நல்ல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.