திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷாக்கிங்... சொத்து தகராறில் தம்பிக்கு கத்தரிக்கோல் குத்து... அண்ணனை கைது செய்து காவல்துறை விசாரணை.!
விழுப்புரம் மாவட்டத்தில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனே தம்பியை குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விநாயகம் என்பவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவகாமி மற்றும் அருணாச்சலம் தம்பதி. இவர்களுக்கு விநாயகம் (42), முருகன்(39), தமிழ்ச்செல்வன்(34) ஆகிய மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூன்று மகன்களில் விநாயகம் சென்னையில் சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது தம்பியான முருகன் செஞ்சி அருகே பெருவளூர் பகுதியிலும் சலூன் கடை நடத்தி வந்தார்.
அருணாச்சலம் முருகன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு வீடு கட்ட மனை வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த மனையில் இருவரும் வீடு கட்டி வசித்து வந்தனர். ஆனால் மூத்த மகனான விநாயகத்திற்கு அவர் வீட்டுமனை கொடுக்கவில்லை. இது தொடர்பாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்நிலையில் ஊர் திருவிழாவிற்காக சென்னையில் இருந்து வந்த விநாயகம் வீட்டுமனை தொடர்பாக தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவர் இடையே சமரசம் செய்வதற்காக அவரது தம்பி முருகன் வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த விநாயகம் கத்திரிக்கோலை எடுத்து முருகனின் மார்பில் குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகனை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விநாயகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.