திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாரிசு வேலைக்காக சொந்த தங்கையை வெட்டிக் கொலை செய்த அண்ணன்... போலீசில் சரண்டர்...!
சிவகாசி அருகே இருக்கும் ஸ்டேட் பாங்க் காலனியில், வாரிசுக்கு வேலை வாங்குவதில் உண்டான தகராறில் உறவினர்கள் இரண்டு பேர் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கும் ஸ்டேட் பேங்க் காலனியை வசிப்பவர் முருகேஸ்வரி. இவரது மகன் ரவி. சிவகாசி மாநகராட்சியில் வேலை செய்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் இந்த வேலையை தனக்கு வழங்க வேண்டும் என்று ரவியின் மனைவி ரவி லட்சுமி கேட்டுள்ளார்.
ஆனால் மகனின் வேலையை தனது பேரன் ராகுலுக்கு வழங்குவேன் என்று முருகேஸ்வரி கூறியுள்ளார் இதனால் மருமகள் மாமியார் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் முருகேஸ்வரி அவரது வீட்டில் உறவினர் கருப்பாயி தமயந்தி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த ரதிலட்சுமியின் அண்ணன் காளிராஜன் ரதி லட்சுமி உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரதிலட்சுமியின் அண்ணன் காளிராஜன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, இரண்டு பேரையும் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, திருத்தங்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
திருத்தங்கல் காவல்துறையினர் இறந்து கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து திருத்தங்கள் காவல்துறையினர், இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.