மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை! சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு!
இன்று கல்லூரி படிப்பினை முடித்த பெரும்பாலான இளைஞர்கள் சரியான வேலை இல்லாமல், கிடைத்த வேலையினை செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக BE முடித்த மாணவர்களே அதிகம். தற்போது BE பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் BSNL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப இந்த வேலை வாய்ப்பானது அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி : மேலாண்மைப் பயிற்சி
காலியிடங்கள் : 300
வயதுவரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணினி, ஐடி, எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தப்படச்ம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்
தேர்வு நடைபெறும் தேதி : 17.03.2019
விண்ணப்பக் கட்டணம் : BC மற்றும் OC பிரிவினருக்கு - ரூ.2,200 மற்ற பிரிவினருக்கு - ரூ.1100
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.bsnl.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2018 முதல் 26.01.2019 வரை மட்டுமே
இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களுக்கு http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf