திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உற்சாகத்தில் கேப்டன் விஜயகாந்த்! கேக் வெட்டி கொண்டாட்டம்! என்ன விஷயம் தெரியுமா?
சினிமா துறையில் இருந்து அதிரடியாக அரசியலில் குதித்து மக்களின் செல்வாக்கை விரைவில் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் தொடங்கிய தேமுதிக கட்சியில் ஆரம்பத்திலிருந்தே இவருடைய தொண்டர்கள் தீவிரமாக உழைக்க தொடங்கினர். இதன் பயனாக தேமுதிக கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பையும் பெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.
சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளார். கட்சிப் பொறுப்புகள் அனைத்தும் அவரது மனைவி மற்றும் மைத்துனர் கையில் சென்று விட்டது.
இந்நிலையில் மீண்டும் உடல்நல குறைவால் அமெரிக்க சென்றுள்ளார் கேப்டன். சில நாட்களுக்கு முன்னர் குடியரசுதின வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் குழந்தை போல் பேசியிருப்பார் கேப்டன். இந்நிலையில் அவர் பூரண குணமாகி மீண்டும் தனது கம்பீர குரலில் பேசவேண்டும் என அவரது தொடர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், தன் மனைவியுடன் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து 29 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன்.