மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார் விபத்து.. தந்தை குழந்தை பலியான சம்பவம்.. பதறும் குடும்பத்தினர்..!
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருபவர் திமுக கவுன்சிலரான சந்தோஷ் குமார். இவர் செட்டிபாளையம் 10வது வார்ட் திமுக கவுன்சிலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சந்தோஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் காரில் பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்புறம் வந்த மற்றொரு கார் சந்தோஷ் குமார் சென்ற காரின் மீது அதிபயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் சந்தோஷ் குமார் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர். மேலும் அவரது மனைவி உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த விபத்துக் குறித்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் விபத்தில் தந்தை மற்றும் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.