மாங்காடு அருகே அதிவேக பயணத்தால் நிகழ்ந்த கோரவிபத்து... 3 பேர் பலி... 2 பேர் படுகாயம்...



Car accident near by mankadu 3 members died

மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியில் இன்று அதிகாலை அதிவேகமாக வந்த கார் சாலையோர தடுப்பு சுவற்றில் மோதி விபத்துள்ளானது. இந்த விபத்து குறித்த அப்பகுதி வழியே சென்றவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. 

Mankadu

அதிமுகவை சேர்ந்த இவர்கள் தொழிலதிபர்களாக இருந்து வரும் நிலையில் வேடந்தாங்கலில் இவர்களுக்கு சொந்தமான பொக்லைன், ஜேசிபி எந்திரங்கள் இயங்கி வருவதாகவும் அந்த வாகனம் பழுதடைந்ததால் இங்கிருந்து மெக்கானிக்கை அழைத்து சென்று வாகனத்தை சரி செய்துவிட்டு காரில் ஐந்து பேரும் வந்துள்ளனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் இறந்து போனதும் உடன் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.