திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. பெண் காவல் அதிகாரி பரிதாப பலி.. கணவன் - மனைவியாக செல்கையில் சோகம்.!
காரின் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த பெண் காவல் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியத்தில் வசித்து வருபவர் சதீஷ் குமார். இவரின் மனைவி சுகந்தி (வயது 27). இவர் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
கணவன் - மனைவி இருவரும் தங்களது காரில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வக்கம்பட்டியில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளனர். காரை சதீஷ் குமார் இயக்கியவாறு வந்துள்ளார்.
இவர்கள் திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் வந்தபோது, ஏ.பி நகர் அருகே லாரி தம்பதியின் கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், சுகந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சதீஷ் குமார் படுகாயத்தோடு உயிருக்கு போராடிதுடித்த நிலையில், அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.