அனுமதியின்றி ஸ்பா நடத்திய விவகாரம்... விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீதுவழக்கு.!



case-against-vijay-people-movement-administrator-in-the

திருச்சி மாநகரில் அனுமதி இன்றி ஸ்பா நடத்தியதாக  விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் விபச்சார தடுப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாநகரில் உள்ள கருமண்டபம்  என்ற இடத்தில் சங்கராயர் நகரில் இயங்கி வரும்  ஸ்பா ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக திருச்சி விபச்சார தடுப்பு காவல்துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலைத் தொடர்ந்து விபச்சார  தடுப்பு பிரிவு காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையில்   காவல்துறையினர் அங்கு  சோதனை நடத்தினர்.

tamilnaduஅங்கு ஒரு வீட்டில் ஷைன் ஸ்பா  என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்திருந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் மேலும் இரண்டு பெண்களும் பணியில் இருந்தனர். காவல்துறையினர் அங்கு சோதனை செய்தபோது அந்த ஸ்பா அனுமதியின்றி பல ஆண்டுகளாக நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த 3 பெண்களையும் மீட்ட காவல்துறையினர்  அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்

tamilnaduஇந்த விவகாரம் தொடர்பாக அந்த ஸ்பாவின்  மேலாளரை கைது செய்தனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி வயலூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் இந்த ஸ்பாவின் உரிமையாளர் என தெரிய வந்தது . மேலும் அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் ஸ்பா நடத்திய பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.