மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் குடியிருப்பு பகுதியை சுற்றி வந்த கரடியால் பரபரப்பு!,..வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை,,!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் கரடி ஒன்று சுற்றித்திரியும் காட்சி சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புது அக்ரஹாரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 .30 மணிக்கு வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து நடமாடி உள்ளது. இதை பார்த்த தெரு நாய்கள் குறைத்தன. இதை அடுத்து கரடி தெருவை சுற்றி சுற்றி வந்தது. பின்னர் அங்குள்ள வீடு ஒன்றில் நுழைந்தது. அப்போது நாய்கள் குரைத்ததால் அந்த கரடி அருகில் உள்ள புதருக்குள் சென்று புகுந்து கொண்டது.
இதற்கிடையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு சந்தேகமடைந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் வீட்டில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை சோதனை செய்து பார்த்த போது குடியிருப்பு பகுதிக்குள் கரடி சுற்றி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.