#CCTV Footage: அடேங்கப்பா.. ஓனர் இல்லாத நேரத்தில் மர்ம கும்பல் நூதன கைவரிசை.. உஷார்.!



CCTV Footage Trend about Strangers Try to Stolen Money at Shop

மளிகை கடையில் நூதன திருட்டில் ஈடுபட்ட நபர்களின் முயற்சி பெண்ணால் தவிர்க்கப்பட்ட நிலையில், விழிப்புணர்வுக்காக வீடியோ வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், "மளிகை கடையில் உரிமையாளர் இல்லாத நேரத்தில், பெண்மணி ஒருவர் பணம் வாங்கும் இடத்தில் இருந்து பணியாற்றி வருகிறார். அப்போது, மளிகை கடைக்கு வந்த நபர் ரூ.200 மதிப்புள்ள துடைப்பத்தை எடுத்து வந்து, அதற்கு ரூ.2 ஆயிரம் பணம் கொடுக்கிறார். 

கடையில் பணியில் இருந்த பெண்மணி மீதி தொகையாக ரூ.1800 கொடுத்த நிலையில், உள்நோக்கத்துடன் வந்த நபர் பெண்மணியின் கவனத்தை திருப்பி ரூ.1000 -த்தை மறைத்து வைக்கிறார். இந்த துடைப்பதற்கு ரூ.200 ஆ? என்று கேள்வி எழுப்புவது போல பெண்மணியின் முகத்தை நோக்கி துடைப்பத்தை காண்பித்து கவனத்தை திருப்பிய நிலையில், எனக்கு துடைப்பம் வேண்டாம் என்று கூறுகிறார். 

CCTV Footage

பின்னர், பணத்தை கொடுங்கள் என்று கேட்கவே, பெண்மணி சுதாரிப்பாக அதனை எண்ணிப்பார்க்கையில் ரூ.1000 குறைந்துள்ளது. இதனையடுத்து, பணத்தை கேட்டதும் மர்ம நபர் அதனை கொடுத்துவிடுகிறார். அவருடன் வந்த கூட்டாளி ஒருவன், பேச்சுக்கொடுத்தவாறு சில்லறை கேட்கவே, தொடர்ந்து பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்தவாறு அடுத்த மோசடி செயல்படுத்தப்படுகிறது. 

CCTV Footage

சுதாரித்த பெண்மணி தனது கையில் இருந்த பணத்தை கல்லாப்பெட்டியில் போட்டு, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மர்ம நபரை விரட்டியடிக்கிறார். கடையில் உரிமையாளர் இல்லாத நேரங்களில் மர்ம கும்பல் இவ்வாறாக நூதன திருட்டு முயற்சியில் ஈடுபடுவதாக விடியோவுக்கு பின்னணியில் பேசும் நபர் கூறுகிறார்". இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.