மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தையுடன் வீடியோ காலில் பேசியபோது திடீரென வெடித்து சிதறிய செல்போன்.! இளம்பெண்ணின் கண்கள் பாதிப்பு.
தனது தந்தையுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்ததில் இளம் பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்துவரும்நிலையில் நேற்று தனது 18 வயது மகள் ஆர்த்தியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். ஆர்த்தி தனது தந்தையுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் திடீரென வெடித்ததில் செல்போன் துகல்கள் ஆர்த்தியின் கண்ணுக்குள் புகுந்துள்ளது.
இதனால் வலியில் அலறி துடித்த ஆர்த்தியை உறவினர்கள் மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி வழங்கப்பட்டு ஆர்த்தி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் சார்ஜில் இருந்ததாலையே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், செல்போன் வெடித்தபோது ஒரு பெரிய டயர் வெடித்த அளவுக்கு சத்தம் கேட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இளம் பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.