மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் அவ்ளோதான்..! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி.!



cell phone not allowed in school

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

மாணவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில் பள்ளிகளில் முதல் ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் அதன் பின்பு தான் வகுப்புகள் தொடங்கும். 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள், காவல் துறையை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீறுடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.