மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பண்டிகை காலங்களில் கொண்டாட்டங்களுக்கு தடை?.. அமலாகுது கடும் ஊரடங்கு?..!
உலக நாடுகளிடையே மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், இராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு 220 ஆக உயர்ந்துள்ள நிலையில், டெல்டாவை விட ஒமிக்ரான் தீவிரத்தன்மை கொண்டுள்ள காரணத்தால் 3 ஆவது அலைக்கான அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி இருப்பதால், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அவசியமாகியுள்ளது.
இந்த நிலையில், இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்துதல், 24 மணிநேர உதவி மையம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் பாசிட்டிவிட்டி விகிதம் 10 % க்கு மேல் இருந்தால், அம்மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 100 % தடுப்பூசி செலுத்தும் பணிகள் உறுதிப்படுத்த வேண்டும். அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை உடனடியாக ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.