மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டபகலில் மாஸ்க் போட்டு கொண்டு மூதாட்டியிடம் இளம்பெண் செய்த துணிகர செயல்... பின் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் வீட்டில் தனிமையில் இருக்கும் போது மாஸ்க் அணிந்தப்படி இளம்பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளதாக கூறி முனியம்மாள் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சென்றதும் அந்த இளம்பெண் முனியம்மாளை கட்டிப்போட்டு மிரட்டி அவர் கழுத்திலிருந்த 11 பவுன் ஜெயினை கொள்ளையடித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து முனியம்மாள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது அந்த இளம்பெண் திருடிய நகையை அன்னம்பார்பட்டியில் உள்ள நகை அடகு கடையில் அடகு வைத்தது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.
போலீசார் திருடிய நகைகளை முனியம்மாளிடம் கொடுக்கும் போது தான் நகையை திருடியது முனியம்மாளின் சொந்த பேத்தி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.