திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை சுற்றியுள்ள பிற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமானது முதல் அதிகன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.