12 ஆம் வகுப்பு தேர்வை எழுத தவறிய மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு!!



chance-to-12-standard-student-for-write-exam

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. ஆனால் அப்பொழுது நாடு முழுவதும் கொரோனா பரவி வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இத்தகைய சூழ்நிலையில் ஏராளமான மாணவர்கள் வேதியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வுகளை எழுதவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு, அவர்களது நலன்கருதி மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் சில அரசியல் கட்சியின் சார்பாக கோரிக்கைகள் விடப்பட்டது. இந்நிலையில் இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

public exam

அதன்படி தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வை தவறவிட்டதற்கான காரணம் மற்றும் மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றை தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும். மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் குறித்த விவரங்களை  24-ம் தேதிக்குள் ஒப்படைக்கவேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.