சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
ஏலச்சீட்டு மோசடி; 100 க்கும் மேற்பட்டோருக்கு அல்வா கொடுத்த பலே பார்ட்டி: போலீஸ் வலைவீச்சு..!
தர்மபுரியில் ஏலசீட்டு நடத்தி பொது மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த மணிவண்ணன். இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். மணிவண்ணன் நடத்திய சீட்டு கம்பெனியில் தொப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக சேர்ந்து தவணை செலுத்தி வந்துள்ளனர்.
தொடக்கத்தில் நம்பிக்கையளிக்கும் வகையில் சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு சீட்டு முதிர்வு தொகை வழங்கி வந்தார். இதன் மூலம் மக்களின. நம்பிக்கையை சம்பாதித்த இவர் கடந்த சில மாதங்களாக சீட்டு முதிர்வடைந்த நபர்களுக்கு சரியாக பணம் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்.
இதனால் பணம் கட்டியவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டிக்கிடந்துள்ளது. அங்கு விசாரித்த போது கடந்த ஏழு மாதங்களாக பூட்டி கிடந்த்தை அறிந்த மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்தனர்.
இந் நிலையில், நேற்று பணத்தை கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் குமாரசாமி பேட்டையில் உள்ள மணிவண்ணனின் உறவினரான, சீட்டு கம்பெனியில் வேலை பார்த்து வரும் செந்தில் என்பவரை மடக்கிப்பிடித்து, தருமபுரி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சீட்டு கம்பெனி உரிமையாளர் மணிவண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,