மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி! குமுறும் பொதுமக்கள்!
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, திண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த10 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த புகார் மனுவில், "எங்கள் ஊரை சேர்ந்த 10 பேரிடம் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பார் தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் வேலைவாங்கி தருவதாக கூறி எங்களிடம் 85 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 10 லட்சம் வரை ரூபாய் பெற்றுக் கொண்டார்.
அவர் எங்களிடம் இருந்து பணத்தை பெற்ற பிறகு எங்களை கண்டுகொள்ளவில்லை.மூன்று மாதங்கள் கழித்து கேட்டபோது, எங்களுக்கு சரியான பதிலை அளிக்காமல் ஏதேதோ கூறினார். நாங்கள் அனைவரும் கூலிவேலை செய்து வந்தநிலையில் பைனாஸ்சியரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்தோம். பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு விரட்டுகின்றனர்.
பணத்தை தருமாறு மணிகண்டனிடம் கேட்டால், அவர் எங்களை ஆள் வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். காவல்துறையில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை, எனவே எங்களுக்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக காவல்துறையை நடவடிக்கை எடுக்க கோர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.